நாசரேத்தில் அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா!

0
8
admk

நாசரேத், அக்.18:

நாசரேத் பேருந்து நிலையம் மற்றும் கேவிகே சாமி சிலை ஆகிய இடங்களில் அதிமுகவின் 49 வது ஆண்டு தொடக்க விழா நாசரேத் நகர கழகம் சார்பில் கொடி யேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் கொடியேற்றி வைத்தனர்.மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஞானையா முன்னிலை வகித்தார்.

தென்திருப்பேரை நகரச் செயலாளர் ஆறுமுகம் நகர அவைத்தலைவர் சிவசுப்பு, நகரத் துணைச் செயலாளர் முருகேசன், நகர அம்மா பேரவை செயலாளர் தினகரன், நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் திருமலைவாசன், இளைஞர் பாசறை செயலாளர் ஜெயக்குமார், நகர மாணவரணி செயலாளர் அர்ஜுன் சங்கர், கழக இணைச்செயலாளர் கோமதி, மகளிர் அணி செயலாளர் கிருபா, கழகப் பொருளாளர் கணபதி, வர்த்தகப் பிரிவு சரவணன், இலக்கியப் பிரிவு செல்வகுமார் விவசாய பிரிவு ஆறுமுகநயினார், வார்டு செயலாளர் மாயாண்டி, சைமன், ராஜ்குமார், சுப்பு, செல்வம், பட்டு தங்கம், ஹரி, மணி, நர்சிங் தினேஷ், மனோ, எம்ஜிஆர் சேர்ம துரை, பரமசிவம், சுயம்பு ராஜ், கார்த்திக், ஜெகதீஷ் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here