தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தல்

0
36
thattarmadam inspector news

சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்த தனிஸ்லாஸ் மற்றும் கொலை செய்யப்பட்ட அவரது மகன் செல்வனின் மனைவி செல்வஜீவிதா தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வந்து கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் குடும்பத்தினருக்கும், அதிமுக பிரமுகர் திருமணவேல் என்பவரது குடும்பத்திற்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக கடந்த 17.9.2020 அன்று எனது மகன் செல்வனை திருமணவேல் மற்றும் அவனது கூட்டாளிகள் கடத்தி சென்று கொலை செய்து விட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எனது மகன் செல்வன் கொலைச்சம்பவத்திற்கு தூண்டுகோலாக இருந்த தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது மகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும், எனது மருமகளுக்கு அரசு வேலை வழங்குவதுடன், பசுமைவீடு திட்டத்தில் இலவச வீடு வழங்கவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here