தூத்துக்குடி அக்.20-
அமமுக ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளராக குலையன்கரிசலை சேர்ந்த வி.பி.ஆர்..சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக தொடர்ந்து 10ஆண்டுகளும், தூத்துக்குடி யூனியன் சேர்மனாக தொடர்ந்து 10 ஆண்டுகளும் பணியாற்றி வந்தவர் குலையன்கரிசல் வி.பி.ஆர் சுரேஷ். தற்போது இவர் குலையன்கரிசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் அ.தி.மு.க வில் இருந்து விலகி அமமுக வில் இணைந்து கட்சி பணி ஆற்றி வந்தார்.
இந்நிலையில் தற்போது இவருக்கு அமமுக ஜெயலலிதா பேரவை இணை செயலளார் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது. அமமுக வில் பணியாற்ற எனக்கு கட்சி பொறுப்பு வழங்கிய பொது செயலாளர் தினகரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமமுக வின் அனைத்து கீழ் மட்ட நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை நல்ல நட்புறவுடன் பழகி கட்சி வலுப்பட பாடுபடுவேன் என்று கூறினார்.