டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் இருக்கும் சரக்கு குடிக்கும் ’பார்’க்கு வேறு எங்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால் அட்ஜஸ்ட் மெண்ட்ல் சில இடங்களில் மட்டும் பார் திறந்திருக்கிறது என்கிறார்கள்.
அந்த வகையில் தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெரிவில் இருக்கும் டாஸ்மார்க் கடை அருகில் இருக்கும் பார், ஏக போகமாக திறந்திருக்கிறது என்கிற குற்றசாட்டு சொல்லப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் உலாவரும் புகைப்படமே அதற்கு சாட்சி. அத்தனை பெரிய பஜாரில் தெரியாமல் போகுமா என்ன? இனியாவது அதிகாரிகளின் பார்வை அந்த பக்கம் திரும்புமா?