விளாத்திகுளத்தில் திமுகவினர் கட்சி கொடி ஏற்றும்போது, அதிமுகவினரும் கட்சி கொடியேற்ற முரண்டு – தள்ளு முள்ளு -போலீஸ் தடியடி

0
108
vilathikulam admk - dmk news

விளாத்திகுளம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், சமீபத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்ததையொட்டி அவர் விளாத்திகுளம் பகுதியில் திமுக கொடியேற்றும் நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்தார். அதன்படி விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திமுக கொடிக்கம்பத்தில் இன்று மாலையில் கொடியேற்ற கடந்த சில நாட்களுக்கு முன்னரே காவல்த்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு கொடியேற்ற காவல்த்துறையால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று திமுகவினர் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். சாலை ஓரங்களில் திமுக கொடிகள் நடப்பட்டன. இதற்கிடையே அதிமுகவினரும் அதேபோல் அதிமுக கொடிகளை நட்டனர். திமுக கேட்டிருந்த அதே நேரத்தில் அதிமுகவினரும் கொடியேற்றுவதற்காக ஆய்த்தம் ஆகினர். விளாத்திகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர் பால்ராஜ் மூலம் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் திமுக மற்றும் அதிமுகவினரை ஒரே நேரத்தில் கொடியேற்ற அனுமதிக்க முடியாது என காவல்துறை மறுத்தது. அதிமுகவிற்கு அனுமதி கொடுக்கவில்லை.

இந்தநிலையில் இன்று மாலை அனுமதி பெற்ற நேரத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜிவன், மார்க்கண்டேயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கொடியேற்றும் இடத்திற்கு வந்தனர். கீதாஜீவன் கொடியேற்றினார். அந்தவேளையில் தங்களுக்கு அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்து விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ உள்ளிட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள், துரோகி மார்கண்டேயன் ஒழிக என்று கோஷம் எழுப்பினர்.

அப்போது கொடியேற்றிதிரும்பிய திமுகவினரும் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரும் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களுக்குள் சிறிது தள்ளு முள்ளு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்தநிலையில் உள்ளே புகுந்த காவல்த்துறையினர் இரண்டு தரப்பையையும் விலக்கிவிட்டனர். மேலும் அதிமுகவினர் முரண்டுபிடித்ததால் லேசாக தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதில் எம்.எல்.ஏ சின்னப்பனும் தள்ளு முள்ளுவில் சிக்கினார். போலீஸார் நடத்திய தடியடியால் அப்பகுதியில் பிரச்னை தவிர்க்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here