தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு

0
112
tuty

தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு காலியாகவுள்ள படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிவில் பிரிவில் ஒரு சில இடங்களும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பிரிவில் மாணவிகளுக்கு மட்டும் காலியாகவுள்ள இடங்களில் சேர்ந்திட முதலாம்ஆண்டு பட்டய வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ரூ.150செலுத்தி பாலிடெக்னிக் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் விண்ணப்ப படிவங்களை சாதி சான்றிதழ் நகலினை கொடுத்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவ, மாணவியர்கள் வரும் 31ம் தேதி மாலை 5மணிக்குள் அலுவலகத்தில் நேரில் வந்தோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்திடவேண்டும். மாணவர் சேர்க்கையானது மதிப்பெண் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் நடைபெறும்.

மேலும், பகுதிநேர பட்டயப்படிப்பில் ‘அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல்’ பாடப்பிரிவுகளில் சேர விரும்புவர்கள் அதற்கான விண்ணப்பத்தினை அலுவலகத்தில் பெற்று வரும் 31ம் தேதி மாலை 5மணிக்குள் ஒப்படைத்திடவேண்டும். தொழில்நுட்ப கல்வி இயக்குநரின் ஆணையின்படி மாணவ, மாணவியர்களின் நலன்கருதி வரும் 31ம் தேதி வரை முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here