Home செய்திகள் முல்லை பெரியாறு: கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

முல்லை பெரியாறு: கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

0
30

 சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி முல்லை பெரியாறில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

முல்லை பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தது. இந்த முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சரமாரி கேள்விகளையும் கேட்டுள்ளது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கூறுகையில், முல்லை பெரியாறு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக கோர்ட் உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? உத்தரவை மீறி எதற்காக கட்டுமானப் பணி மேற்கொள்வீர்கள்? வாகன நிறுத்துமிடம் தொடர்பாக கேரள அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள். எத்தனை வாகன நிறுத்துமிட கட்டுமான பணிகளை மேற்கொள்வீர்கள்? 15 நாட்களுக்குள் தங்களின் பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Translate »