தூத்துக்குடியில் அதிமுக 49 வது ஆண்டு துவக்க விழா – எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

0
88
admk sp.shanmuganathan

தூத்துக்குடி அக் 23

தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி திடலில் மரக்கன்றுகள் வழங்கி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகவினர் கொண்டாடினர்.

அதிமுகவின் 49வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி சிவன் கோயில் தேரடியில் நேற்று மாலை தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி மாணவரணி செயலாளர் மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்த அதிமுக 49 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு மரம் மற்றும் பூச்செடி கன்றுகளை வழங்கி மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அவ்விடத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி அதிமுக ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முள்ளக்காடு வக்கீல் செல்வக்குமார், மாவட்டக் கழக துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, கருங்குளம் ஒன்றிய செயலாளரும் யூனியன் துணை தலைவருமான செக்காரக்குடி லெட்சுமனபெருமாள், மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய்,

மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பில்லா விக்னேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் பரிபூரணராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் முனியசாமி, துணை செயலாளர் வக்கீல் சரவணபெருமாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், ஐடியல் பரமசிவம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், இணைச்செயலாளர் இம்ரான், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் கேடிசி லட்சுமணன், மாவட்ட பிரதிநிதிகள் முன்னாள் கவுன்சிலர் கோல்டன், அண்ணா நகர் சிவன்,

மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் இந்திரா, மத்திய வடக்கு பகுதி இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரமேஷ், கிழக்கு பகுதி மகளிர் அணி செயலாளர் ஷாலினி, கிழக்குப் பகுதி இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் ஸ்மைலா, மத்திய வடக்குப்பகுதி சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ஹஸன், வட்டக் கழக செயலாளர்கள் அசோகன், எஸ்.கே. முருகன், ஈஸ்வரன், கொம்பையா, ஜெயபால் காமாட்சி, வி.வி.பெருமாள், வட்டப் பிரதிநிதி நவ்சாத், மகளிர்கள் கௌசல்யா, சுகந்தி, பானு, பொன்னரசி மற்றும் நிலாசந்திரன், மத்திய வடக்கு பகுதி மாணவர் அணி இணை செயலாளர் வேல்முருகன், சிவசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சகாயராஜா உட்பட திரளான கழகத்தினர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here