சசிகலா விடுதலை ஆக வேண்டி பன்னம்பாறை கோயிலில் சிறப்பு பூஜை

0
95
sasikala news

சாத்தான்குளம், அக்.23:

பன்னம்பாறை ஸ்ரீஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலில் சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றிய தமிழ்நாடு சசிகலா பேரவை சார்பில் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை ஸ்ரீஈந்தடி சுடலை ஆண்டவர் சுவாமி கோயிலில் சிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலையாகி நலமுடன் வர வேண்டும் என சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேரவை ஒண்றிய செயலர் பென்னி (எ)சித்திரைராஜ் தலைமை வகித்தார். சாத்தான்குளம் நகர செயலாளர் முருகன், நாசரேத் நகர செயலாளர் உலககுமார், சாத்தான்குளம் ஒன்றிய தலைவர்படம் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சசிகலா கணவர் நடராஜன் பிறந்த நாளையொட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில்மாவட்ட துணைத் தலைவர் செந்தில்விநாயகம், மாவட்ட செயலர் பாலமுருகன், பொருளாளர் சுடலைமுத்து, கிளை செயலர்கள் பிச்சைமுத்து, சரவணன், இசக்கிபாண்டியன், இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பூஜைக்கான ஏற்பாடுகளை ஒன்றிய தலைவர் படம் பரமசிவம் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here