ஆத்தூர் – திருச்செந்தூர் இடையே ‘நடைபாதை’பணியில் தரம் இல்லை – காங்கிரஸ் கடும் குற்றசாட்டு

0
93
karthikraja news
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ஆறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவிலுக்கு, நாடு முழுவதிலுமிருந்து, ஆண்டு முழுவதிலும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதுபோல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

எனவே திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் இடையிலான வழிச்சாலைகள் விரிவாக்கம் செய்வதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான திட்டமும் தயாராகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையில் ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதியில் பக்தர்கள் செல்வதற்கு வசதியாக நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அந்த பணியில்தான் தற்போது ’தரம் இல்லை’ என்கிற குற்றசாட்டு எழுந்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் தண்டுபத்து டிடிகே. கார்த்திக்ராஜா, இது குறித்து புகார் தெரிவித்து வருகிறார். அவர் நம்மிடம், ’’மக்களுக்குத் தேவையான எந்த ஒரு நல்லத் திட்டத்தையும் ஆதரித்தே ஆகவேண்டும். அதுபோல் எந்த ஒரு திட்டத்திலும் குளறுபடி இருந்தால் அதை சுட்டிகாட்டியே ஆக வேண்டும். அந்த வகையில்தான் நாங்கள் இந்த திட்டத்தில் உள்ள குறையை சுட்டிக்காட்டுகிறோம்.

ஏற்கனவே தூத்துக்குடி – கன்னியாகுமரி இடையே அகலமான சாலை அமைக்கும் திட்டம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கும் போது அந்த திட்டத்தை தொடங்கும் முன்பாக தற்போது நடந்து வரும் நடைபாதை திட்டம் அவசியமா? அல்லது இந்த திட்டம் நீடிக்க கூடியதா ? என்கிற கேள்வி எழுகிறது.

எது எப்படியோ முடிவு செய்துவிட்டார்கள் திட்டம் நிறைவேற்றபடும் நிலைக்கு வந்துவிட்டது. அது பக்தர்களுக்கு பயன்பட வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அந்த திட்ட வேலைகள் நடைபெறுவதை பார்த்தால் மிகவும் மோசமாக இருக்கிறது. பேவர் பிளாக் கட்களை கொண்டு நடைபாதை அமைக்கிறார்கள். அந்த கட்களும் குவாலிட்டியா இல்லை. அதை வைக்கிற இடமாவது முழுமையான அளவில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு இடத்தில் அகலமாகவும் இன்னொரு இடத்தில் குறுகலாகவும் இருக்கிறது.

இந்த நடைபாதையை நம்பி பக்தர்கள் அதில் போகமுடியாது. ஆத்தூர் போலீஸ் ஸ்டேன் முன்பாக பழைய கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த காரை கூட நகர்த்திவிட்டு அதில் போடவில்லை. அந்த கார்கள் போக மீதியுள்ள இடத்தில் இந்த கட்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க ஒப்பேற்றுகிற வேலையாகத்தான் பார்க்க முடிகிறது. கிரணூர் – ஆறுமுகநேரி சாலை பகுதிகள் தண்ணீர் தேங்குகிற பகுதி. அந்த பகுதியில் இவர்களின் நடைபாதைகள் 6 மாதம் கூட தாங்காது.

ரூ1.70 கோடி மதிப்பில் அந்த திட்ட வேலைகள் நடந்து வருவதாக சொல்கிறார்கள். நிச்சயமாக அந்த வேலைக்கு அவ்வளவு தொகை ஆகாது. மக்களின் வரிப்பணம் இதில் நிறைய வீண் ஆகியிருக்கிறது. நடைபெற்று வரும் இந்த வேலையில் தரம் இருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதா என தெரியவில்லை. இதன் மூலம் நடவடிக்கை எடுத்து அந்த திட்ட வேலைகளை தரமாக செய்து முடிக்க வேண்டும் அவ்வளவுதான். விரைவில் தமிழக முதல்வர் தூத்துக்குடிக்கு வரயிருக்கிறார். அதற்குள் இந்த வேலையை செய்துமுடிக்க வேண்டுமென அவசர கதியில் அப்பணி நடந்து வருவதை பார்க்க முடிகிறது.

சமீபகாலமாக ஆளும்கட்சிக்கு வேண்டிய குறிப்பிட்ட நபர்தான் இதுபோன்ற அரசு திட்ட பணிகளை செய்துவருகிறார்கள். அந்த நபர் செய்யும் வேலைகள் பலவும் தரமற்றதாக இருப்பதை பார்க்க முடிகிறது. எல்லா நாளும் அதை வேடிக்கை பார்க்க முடியாது. தொகுதி எம்.எல்.ஏ இதை கவனித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். இந்த விவகாரம் பூதாகரமாக ஆகும்போது அது மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏவையும் பாதிக்கும்.

கூட்டணி தர்மத்திற்காக எல்லாவற்றையும் எப்போதும் வேடிக்கை பார்க்க முடியாது. அதுபோல் ஆளும் கட்சி, ’இப்படித்தான் செய்வோம்’ என்பதுபோல் ஆளும் தரப்பு செயல்படுமானால் நிச்சயமாக மாபெரும் போராட்டம் ஒன்றை காங்கிரஸ் கட்சி நடத்தி அதில், தரமன்ற பணிகள் எவை எவை என்பதை வரிசைபடுத்தி காட்டுவோம். எனவே முறையாக ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட ஒப்பந்தகாரரை மீரமுடியாத நிலையில் அதிகாரிகள் தவிப்பதாக இருந்தால் அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது.

அநீதியை அழிக்கும் கடவுள்களான முருகனையும் முத்தாரம்மனையும் கண் குளிர காண பக்தர்கள், பல நூறு மைல்கள் கால்நடையாக நடந்து வருகிறார்கள். பலநாட்கள் விரதமிருந்து நடந்து வரும் பக்தர்களுக்கு நடைபாதை அமைத்து கொடுப்பதாக ஒப்பந்த செய்து கொண்டு அந்த பணியில் ஊழல் செய்தால் அநீதியை அழிக்கும் கடவுள்கள் சும்மா விடமாட்டார்கள். இந்த மாவட்டத்தில் எத்தனை பணிகளை இந்த ஒப்பந்த காரர்கள் செய்திருக்கிறார்கள்.

அதற்காக இலவசமாகவே இந்த நடைபாதையை அமைத்துக் கொடுக்கலாம். அதைவிட்டுவிட்டு இதிலும் லாபம் சம்பாதிக்கலாம் என பார்த்தால், நிச்சயம் அவர்களுக்கு அசூரணை வதம் செய்யும் கடவுள்கள் பாடம்கற்பித்தே ஆவார்கள்.

இனிமேலாவது அரசு நிர்வாகம், நடைபெற்று வரும் பணியினை உண்மையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முறையிட காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. அதற்கு அருள் கொடுக்க, முருகனும் முத்தாரம்மனும் தயாராக இருக்கிறார்கள்”‘ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here