குரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்

0
32
nalumavadi

நாசரேத், அக்.24: குரும்பூர் இரயில்வே கேட் அருகிலுள்ள நாலுமாவடி தேவனு டைய கூடாரத்தில் இயற்கை உணவ கத்தினை சகோதரர் மோகன் சி.லாச ரஸ் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் இரயில்வே கேட் அருகிலுள்ள நாலுமாவடி தேவனுடையக் கூடார வளாகத்தில் புதுவாழ்வு சபை எதிரில் இயற்கை உணவகம் இன்று முதல் திறக்கப்பட்டது. பன்னீர்செல்வம் பாடல் பாடினார்.சிவப்பு அரிசி இட்லி, கோது மை மாவு பூரி, முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை, முருங்கை கீரை தோசை, கருவேப்பிலை தோசை, பொடித் தோசை, வெங்காயம் ஊத்தாப் பம் காலை, மாலை கிடைக்கும். கருப் பட்டி காபி, சுக்கு காபி, கிரீன் டீ, லெமன் டீ, புதினா டீ, வாழைப் பூ வடை, கீரை வடை, மெதுவடை, வாழைப்பூ சில்லி, மதியம் சாமை சாம்பார் சாதம், வரகு ரசம் சாதம், குதிரை வாலி தயிர் சாதம், திணை பாயாசம், வாழைப்பூ பிரியா ணி, சிறுதானிய மதிய உணவு வகை கள் கிடைக்கும்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு இயற்கை உணவகத்தினை சகோதரர் மோகன் சி. லாசரஸ் ஜெபித்து ரிபன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ் வில் நாலுமாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழிய பொது மேலாளர் செல்வக் குமார், ஜெபசிங், ஜஸ்டின், சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here