அவதூறு வழக்கு: ராகுலுக்கு ஜாமின்

0
20
Tamil_News_large_2312513

ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில், மும்பை கோர்ட்டில் ஆஜரான ராகுலுக்கு ரூ.15 ஆயிரம் உத்தரவாதத்தில் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

பெங்களூருவில் கவுரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளர் 2017-ல் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ராகுல் கூறியது: பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்களின் குரல் நசுக்கப்படுகிறது. அவர்கள் தாக்கப்படுகிறார்கள். துன்புறுத்தப்படுகின்றனர். கொலை செய்யப்படுகின்றனர். மதவாத சக்திகளுக்கு எதிராக போராடியவர் கொல்லப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவங்களை மீண்டும் நடக்க அனுமதிக்கக்கூடாது என்றார்.

ராகுல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த ஹிருத்மான் ஜோஷி என்பவர் மும்பை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுலுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (ஜூலை 4) விசாரணைக்கு வந்த போது ராகுல் ஆஜரானார்.

தொடர்ந்து தன் மீது குற்றம் ஏதும் இல்லை என ராகுல் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, ரூ.15 ஆயிரம் உத்தரவாதத்தின் பேரில், ராகுலுக்கு கோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவாதத்தை, முன்னாள் எம்.பி., ஏக்நாத் கெயிக்வாட் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here