வீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

0
78
kovilpatti

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை கணபதி பூஜையுடன் தொடங்கி, மாலை வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை கணபதி பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது. பிறகு திருக்குடம் யாகசாலையின் இருந்து புறப்பட்டு விமான கோபுர கலசத்திற்கு காலை 9.47க்கு கும்பாபிஷேகமும் காலை 10.15க்கு மூலஸ்தான வீரவிநாயகருக்கு மஹாகும்பிஷேகம், மஹா அபிஷேகம் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் நடைபெற்றது கும்பாபிஷேக பூஜைகளை சங்கரேஸ்வரி கோவில் அர்ச்சகர் சுப்பிரமணியன், ஜெகநாதன் (எ) நடராஜன் ஆகியோர் செய்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ கலந்து கொண்டார். விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here