கோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு

0
92
kadambur raju

கோவில்பட்டி‌ அருகே உள்ள வடக்கு திட்டங்குளத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் ‌தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ற ஆராய்ச்சிக்கு போக வேண்டிய தேவை இல்லை என்றும், முன்னணி நடிகர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அடிக்கடி சந்திப்பது வழக்கம்,‌எந்த நோக்கத்திற்காக ரசிகர் மன்ற நிர்வாகிகளை பார்த்தேன் என்று நடிகர் விஜய் சொன்னால் அதற்கு பதில் சொல்ல முடியும்.ஆண்டுக்கு இரண்டு முறை நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது வழக்கம் அந்த முறையில் சந்தித்து இருக்கலாம்.மன்ற நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அரசியல் என்ற வார்த்தையே வரவில்லை. இல்லாத ஒன்றை பற்றி நாம் பேசுவது சரியாக இருக்காது என்றும், திரையரங்குகள் உரிமம் புதுப்பிக்கும் காலத்தினை 3 ஆண்டு என்று உயர்த்தியதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். வரும் 28ந்தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சியில் ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளார்.

‌வரும் 1ந்தேதிக்கு பின்னர் ஊரடங்கு தளர்வு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் போது அதில் ஒரு அம்சமாக திரையரங்குள் திறப்பு பற்றி ஆலோசனையும் இடம் பெறும் என்றூம், திருமாவளன் மட்டுமல்ல யாராக இருந்தாலும், யாரை பற்றி இழிவாக அல்லது மனது புண்படும்படி பேசினால் தவறு தான்.அவர் சொல்லியது தவறான கருத்து என்றும், அவர் குறிப்பிடும் நூலில் திருமாவளவன் சொன்னது போன்று சொல்லவில்லை என்று பலரும் கூறியுள்ளனர்.

அதையெல்லாம் புரிந்து கொண்டு, இழிவுப்படுத்தும் நோக்கில் சொல்லி இருந்தால் திருமாவளவன் திரும்ப பெற்றுக்கொள்வது சரியாக இருக்கும் என்றும், பொங்கல் பரிசு போன்று தீபவாளிக்கு வழங்குது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும், சூழ்நிலைகளை பொறுத்து முடிவு செய்வார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here