தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை முன்பு சிஐடியூ தொழிற்சங்க போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுப் போக்குவரத்தை முழுமையாக இயக்காமல், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முறையாக பணி வழங்காமல், தற்போது தொழிலாளர்களின் விடுப்பைக் கழிப்பதைக் கண்டித்தும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு எவ்வித பிடித்தமும் இன்றி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கோவில்பட்டி போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ தொழிற்சங்கச் செயலர் மோகன் தலைமை வகித்தார். மத்திய சங்கச் செயலர் சிவகுமார், நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், சிஐடியூ தொழிற்சங்கப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்