குற்றப்பின்னணி உள்ளவர்கள் பாஜகவில் இணைவது புதிதல்ல – தூத்துக்குடியில் சஞ்சய்தத் பேட்டி

0
123
congress news

குற்றப்பின்னணி உள்ளவர்கள் பாஜகவில் இணைவது புதிதல்ல என்று தூத்துக்குடியில் காங்கிரஸ் அ.இ.செயலாளர் சஞ்சய்தத் பேட்டியளித்தார்.

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம்  மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர்கள் ஜசன் சில்வா, சேகர், செந்தூர்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய்தத் வரும் சட்டமன்ற தேர்தல் ஆயுத்த பணி குறித்து விளக்கி பேசினார். பின்னர் மோடி அரசு நிறைவேற்றிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. 

இதில் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று தொடங்கிவைத்தார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ’’மத்திய அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓர் அணியில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக இன்று நாடு முழுவதும் கையெழுத்து பிரச்சார இயக்கம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. நாடு முழுவதும் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நவம்பர் 1-ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் டிராக்டர் பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் தொந்தரவுகள் ஆகியவற்றை தடுத்திட வலியுறுத்தியும், பாலியல் சீண்டல்களை ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் படியான கடும் நடவடிக்கை எடுக்க கோரி நவம்பர் 5 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் எதிரான பல திருத்தங்களை கொண்டு வருகிறது. இதனை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்காது. பாஜக கட்சியில் குற்ற பின்னணியில் உள்ளவர்கள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருவது புதிதல்ல. ஏனெனில் தங்களை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக ஆளும் பாஜகவில் போய் சேர்கின்றனர். இங்குள்ள தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. மத்திய அரசு கைக்குள்‌ செயல்படும் கருவியாக சிபிஐ செயல்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தக்க பதிலடியை பொதுமக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் கொடுப்பார்கள்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநில துணை தலைவர் ஏவிசிவி சண்முகம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணிய ஆதித்தன், அருள், மகிளா காங்கிரஸ் தலைவி முத்து விஜயா, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி, இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நடேஷ்குமார், துணை தலைவர் ஜெயமணி சுரேஷ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பர்னபாஸ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் சகாயராஜ், பெருமாள்சாமி, ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் ராஜ், சிறுபான்னை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், ஒ.பி.சி.பிரிவு மாவட்ட தலைவர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here