வனக்காப்பாளர் தேர்வில் குளறுபடி – சரியான விடைக்கு தவறு என மதிப்பெண் குறைத்திருப்பதாக மாணவர்கள் புகார்

0
44
forest exam news

சாத்தான்குளம், அக். 26:

வனக்காப்பாளர் தேர்வில் சரியான விடைக்கு தவறானது என இரு கேள்விக்கு மதிபெண் வழங்கப்படாததால். சீருடைப்பணியாளர் தேர்வு குழுமத்துக்கு சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வன சீருடைப்பணியாளர் குழுமம் சார்பில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மார்ச் மாதம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 40க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வு 4 பிரிவுகளாக 4நாள்கள் நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம்தேதி வெளியிடப்பட்டது. 7ஆம்தேதியில் இருந்து 10ஆம்தேதி வரை மாணவர்கள் சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்தேர்வில் 3வது பிரிவில் நடத்தப்பட்ட தேர்வில் 368 எண் கேள்வியில் தகவல் தொடபிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கை என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு மாணவர்கள் புத்தகத்தில் உள்ளபடி இன்சார்ட் 1பி என புதிலளித்துள்ளனர். அதேபோல் 408வது கேள்வியில் புனாரஸ் இந்து பல்கலைகழகத்தை தோற்றுவித்தவர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவர்கள் தரப்பில் பலர் புத்தகத்தில் உள்ளபடி அன்னிபெசன்ட் அம்மையார் என பதிலளித்துள்ளனர். ஆனால் தேர்வு குழுமம் இந்த கேள்விக்கு புத்தகத்தில் இல்லாத பதில்களை தெரிவித்து இந்த கேள்விக்கான பதில்கள் தவறானது என குறிப்பிட்டு அதற்கான மதிப்பெண்ணையும் குறைத்துள்ளது. சரியான விடை அளித்தும் தவறான விடை என மறுக்கப்பட்டுள்ளது தேர்வு எழுதிய மாணவர்களுக்கிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதனால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்பட கூடும் என வன சீருடைப்பணியாளர் தேர்வு குழுமத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆதலால் தேர்வு வாரியம் இதனை ஆய்வு நடத்தி சரியான பதிலுக்கு உரிய மதிப்பெண் வழங்கிட வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தேர்வு குழுமத்துக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here