பனை மரத்தில் கள் இறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ஹரி நாடார்

0
141
hari nadar

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பனங்காட்டு படை கட்சி அலுவலகம் திறப்பு விழா கோவில்பட்டி பசுவந்தனை சாலை போடுபட்டி வணிக வளாகம் அருகே நடைபெற்றது. விழாவுக்கு கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் கற்குவேல் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார்.கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், கடம்பூர் நாடார் உறவின்முறை சங்கச் செயலர் காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளைஞரணியைச் சேர்ந்த முத்துக்குமரன் வரவேற்றார். பனங்காட்டு படை கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினார்.இதில், மாநில இளைஞரணி தலைவர் டி.அந்தோணி, கட்சியின் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் ஏ.அந்தோணி, கட்சியின் தலைமை நிலையச் செயலர் பழனி, மாநில கொள்கை பரப்புச் செயலர் விக்னேஷ் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிரணியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

பின்னர், பனங்காட்டு படை கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்தத் தேர்தல் வந்தாலும் பனங்காட்டு படை கட்சி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். 214 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. நாடார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக எங்கள் சமுதாயத்தினர் உள்ளனர்.

ஆனால் அவர்கள் தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்காகவும், தங்களது சுயலாபத்திற்காகவும் தான் சட்டப்பேரவையில் பேசுகின்றனர். சமுதாயத்துக்கு ஒரு பிரச்னையோ, பாதிப்போ ஏற்படும்போது இதற்கான தீர்வை நிலைநாட்டும் வகையில் எந்தவொரு சட்டப்பேரவை உறுப்பினரும் செயல்பட்டதாக சரித்திரம் இல்லை.இச்சமுதாயத்தின் சார்பில் தமிழக முதல்வரை பலமுறை சந்தித்து பனை மரத்தில் இருந்து நீராபானமாகிய கள் இறக்க உரிய அனுமதி வழங்கும்படி வலியுறுத்தினோம். தன்னை விவசாயி எனக் கூறும் தமிழக முதல்வர் கள் இறக்க அனுமதி தர வேண்டும். அதற்கு தாங்கள் அவருக்குரிய தீர்ப்பை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் சமுதாய மக்கள் வழங்குவார்கள் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here