குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா

0
133
kulasai mutharamman

திருச்செந்தூர் -27

உலக புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா மஹிஷாசூரசம்ஹாரம் நடந்தது.

உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூர்க்கு அடுத்ததாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகு விமர்சையாக நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தினமும் இரவு அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிசாசூரசம்ஹாரம் 10 ம் திருவிழா அன்று நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெறும்.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்திலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மாலை அணிந்து விரதமிருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி காளி, அம்மன், ராஜா, ராணி, குறவன், குறத்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தனித்தனியாகவும், குழுக்களாகவும் வீடு, வீடாக சென்று காணிக்கை பெற்று மஹிஷாசூரசம்ஹாரம் நடைபெறும் 10 ம் திருவிழா அன்று கோவில் உண்டியலில் செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம். இந்தாண்டு தசரா திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. தற்போது கொரொனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்தது. பக்தர்கள் கொடியேற்றம், இன்று நடந்த மஹிஷாசூரசம்ஹாரம்,நாளை நடைபெறும் கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு க பக்தர்கள் கலந்து அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் இரண்டாவது திருவிழா முதல் நேற்றுவரை காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார். தசரா குழுக்களுக்கு தங்கள் குழுக்களில் உள்ள பக்தர்களுக்கு ஏற்ற எண்ணிக்கையில் காப்புகள் வழங்கப்பட்டது. பக்தர்கள் வேடமணிந்து கோவிலுக்கு வர அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் வேடமணியும் பக்தர்கள் தங்கள் ஊரிலே காணிக்கை பெற்று வேண்டுதல்களை நிறைவேற்றி திருகாப்பை அறுத்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டார்கள்.

தினமும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி கோவில் உள் பிரகார மண்டபத்தில் நடந்தது. 10 ஆம் திருநாளான இன்று மஹிசாசூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் மஹிஷா சூரமர்தினி கோலத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகம் வந்தார்.

முதலில் தன் முகத்துடன் இருந்த மஹிஷாசூரனை அம்மன் வதம் செய்தார். பின்னர் சிங்கமுகமாக உருவம் பெற்றவனையும் வதன் செய்தார். தொடர்ந்து எருமை முகம் பெற்ற சூயனையும், முடிவில் சேவல் உருவமாக மாறிய மஹிசாசூரனையும் வதம் செய்தார். பக்தர்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால் குலசேகரப்பட்டினம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக 1600 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குலசேகரப்பட்டினம் கோவில், கடற்கரையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 100 தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here