ஸ்ரீவை தொகுதியை குறிவைக்கும் ஊர்வசி அமிர்தராஜ் – காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் தீவிரம்

0
118
uoorvasi amirtharaju

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதியில் இருக்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவான தொகுதியாக இருந்து வந்திருக்கிறது. இதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் தொகுதி என சொல்லலாம்.

கடந்த காலங்களில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவில் காங்கிரஸ் கூட்டணியே வென்றிருக்கிறது. கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு எஸ்.பி.சண்முகநாதன் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ ராணிவெங்கடேஷன் போட்டிபோட்டு குறைந்த அளவிலான ஓட்டு விகிதத்தில் தோற்றார். அதுபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு ஊர்வசி செல்வராஜ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிட்டு தோற்றார்.

இன்னும் ஏழு மாதத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சியினர் தீவிரமாக அரசியல் யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். ஸ்ரீவைகுண்டம் தொகுதியை பொருத்தவரை தி,மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கும் அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்குமே ஒதுக்க வாய்ப்பு இருக்கிறது.

திமுக கூட்டணி என்கிறபோது அத் தொகுதி காங்கிரஸுக்கே ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒதுக்கும் பட்சத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட காங்கிரஸ் பிரமுகர்களுக்குள் போட்டி ஏற்பட போவது உறுதி. அந்த போட்டியில் முதல் ஆளாக முன்னாள் எம்.எல்.ஏ ஊர்வசி செல்வராஜின் மகன் ஊர்வசி அமிர்தராஜ் நிற்கிறார். அடுத்தடுத்து காங்கிரஸில் வேறு யாரெல்லாம் போட்டியிடப்பொகிறார்கள் என விரைவில் தெரியவரும்.

தொகுதியை குறிவைத்தே ஊர்வசதி அமிர்தராஜ் பல கட்ட அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறார். தனது திறமையால் தனக்கு வேண்டியவரையே மாவட்ட தலைராக பெற்றிருக்கிறார். மேலும் நிர்வாகிகள் பலரும் அமிர்தராஜை எதிர்பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. தொழிலதிபரான ஊர்வசி அமிர்தராஜ், நிச்சயம் தேவையான அளவு பணம் செலவு செய்வார் என எதிர்பார்ப்பு இருக்கிறது. சென்னையில் வசித்து வரும் அவர், தற்போது தூத்துக்குடியில் சொந்தமாக வீடு வாங்கி அங்கு குடியமர்ந்திருக்கிறார். தொகுதி மக்களை எளிதில் சந்திக்கும்படியாக இடம்பெயர்ந்திருப்பதாக சொல்கிறார்கள்.

இந்தநிலையில்தான் மாவட்ட காங்கிரஸ் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கி வருகிறார் ஊர்வசி அமிர்தராஜ். அந்த வகையில் சாயர்புரத்தில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஶ்ரீ.ராமன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மாநில இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார். விழாவில் வட்டார தலைவர்கள் ஶ்ரீவைகுண்டம் நல்லகண்ணு திருச்செந்தூர் சற்குரு .கருங்குளம் புங்கன்.ஆழ்வை கோதண்டராமன்.ஆத்தூர் நகர தலைவர் பாலசிங் .ஒபிசி மாவட்ட தலைவர் ஏரல் தாசன் .தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் துரை .துணை தலைவர் இசை சங்கர் .ஶ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத்.சாயர்புர நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் குமரேசன்.

சாயர்புரம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பிச்சை மணி கருங்குளம் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் வக்கீல் சித்தார்த்தன்மற்றும் மகளிரணியர் சிறிய தங்கம் அன்னகளஞ்சியம் .புவனேஷ்வரி .கனகராஜ். மரியான் மற்றும் வட்டார நகர நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here