தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம்

0
78
tuty dmk

தூத்துக்குடி, அக்.29:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்-.ஏ., சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில், வரும் 5ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், கனிமொழி எம்.பி., முன்னிலையிலும் காணொளி காட்சி மூலமாக நடைபெறும் முப்பெரும் விழாவினை வடக்கு மாவட்டத்திலுள்ள மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகங்கள் தோறும் அகன்ற திரை அமைத்து, அதிக தொண்டர்களை திரட்டி சிறப்பாக நடத்திடவேண்டும்.

முப்பெரும் விழாவில் 70வயதிற்கு மேற்பட்ட மூத்த முன்னோடிகள், உறுப்பினர்களை பொற்கிழி வழங்கி கவுரவப்படுத்திடும் வகையில் அவர்கள் பெயர் விபரம் குறித்த தகவலை உடனடியாக மாவட்ட கழகத்திற்கு தெரியப்படுத்திடவேண்டும்.

வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட சிறப்பு முகாம்களில் பங்கேற்று புதிய வாக்காளர்களை சேர்ப்பதுடன், வாக்காளர்களின் பெயர்களை திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் சிறப்பாக செய்திடவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், ராதாகிருஷ்ணன், குமரகுருபரராமநாதன், சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் எஸ்.டி..ஆர்.பொன்சீலன், ஜீவன்ஜேக்கப், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் சுசிரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, சி.எஸ்.ராஜா, தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here