நாசரேத் அருகே பிரகாசபுரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் சார்பில் இலவச சீருடைகள் வழங்கும் நடைபெற்றது.
நாசரேத், டிச.09:நாசரேத்-பிரகாசபு ரத்தில் அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் 14-வது ஆண்டு விழாவும் இலவச சீருடை வழங்கும் விழாவும் செவன் டாலர்ஸ் சிறுவர் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. விழாவை பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குதந்தை அந்தோணி இருதய தோமாஸ் இறைவேண்டுதலோடு துவக்கி வைத்தார்.விழாவிற்கு பேபி கோல்டு கவரிங் உரிமையாளர் ஞானையா தலைமை தாங்கினார்.
ஊழல்தடுப்பு,மக்கள் நுகர்வோர் பேரவை மாநில தலைவர் செல்வன் மூக்குபேரி ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் சாமுவேல் ராஜன் ஜெ.ஜெ டிரேடர்ஸ் உரிமையாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தூத்துக்குடி புறநகர் மாவட்ட டி.யூ.ஜெ. தலைவரும்,புனித ஸ்னோ ரியல்ஸ் உரிமையாளருமான இருதய ஞான ரமேஷ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை வழங்கினார்.மெர்லின் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ஜெபா மணிராஜ் மாணவியர்க்கு சீருடை வழங்கனார்.
விழாவில் 86 மாணவ-மாணவியர்க்கு சீருடை வழங்கப்பட்டது.சிறப்பு விருந்தின ராக தூத்துக்குடி ராஜ் இம்பக்ஸ் உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் முத்துகுட்டி, முத்துகுமார்,அன்ன குமார், எட்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.நாசரேத் பரணி பிராய்லர்ஸ் உரிமையாளர் கிருஷ்ணராஜ் வாழ்த்துரை வழங்கினார்.விழா ஏற்பாடுகளை அன்னை தெரசா தொண்டு நிறுவன செயலாளர் காட்வின் செய்து இருந்தார். நிகழ்ச்சியை ஆசிரியர் செல்வன் தொகுத்து வழங்கினார்.முடிவில் அன்னை தெரசா தொண்டு நிறுவன தலைவர் அந்தோணி ராஜா நன்றி கூறினார்.