வேளாண்மை மசோதாவை எதிர்த்து சாத்தான்குளம் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

0
64
sathankulam congress

சாத்தான்குளம், அக்.28:

சாத்தான்குளம் பகுதியில் மத்திய அரசின் வேளாண்மை மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாநில இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3வேளாண்மை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பகுதியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றனர்.

சாத்தான்குளம் ஒன்றியம் முதலூரில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்து பொதுமக்கள், வியாபாரிகளிடம் நேரடியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை மசோதாவின் விளைவுகளை விளக்கி கையெழுத்து வாங்கினார்.

தொடர்ந்து பொத்தகாலன்விளை, கொழுந்தட்டு, பூச்சிக்காடு, அதிசயபுரம், தச்சன்விளை, கடக்குளம் பகுதியில் பொதுமக்கள், விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தனம், மாவட்ட துணைத் தலைவர் சங்கர், சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் லூர்துமணி, ஒனறியக்குழு உறுப்பினர் பிச்சிவிளை சுதாகர், சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஜோசப் அலெக்ஸ், வட்டார பொருளாளர் சக்திவேல்முருகன், வட்டார செயலாளர் பாஸ்கர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு தலைவர் டேவிட் பிரபாகரன், முன்னாள் மாநகர செயலர் எடிசன், வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி வசுமதி, மாவட்ட பிரதிநிதி யோகபாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து 2ஆம் நாளாக சாத்தான்குளத்தில் வருவாய்துறையினர் வெளிநடப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here