மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து 2ஆம் நாளாக வருவாய்துறையினர் வெளிநடப்பு

0
24
sathankulam

சாத்தான்குளம், அக். 28:

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து 2ஆம் நாளாக சாத்தான்குளத்தில் வருவாய்த்துறையினர் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய்த்துறை ஊழியர்களை தற்போது பணிபுரியும் பகுதியில் இருந்து தூரப்பகுதிகளுக்கு பணிமாற்றம் செய்து விதி மீறலாய் செயல்படுவதுடன் ஊழியர்களை பழிவாங்கும் நோக்கிலும் செயல்படுவதாக வருவாய்த்துறையினர் தெரிவத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1மணி நேரம் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதேபோல் 2ஆம் நாளாக சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பணிகளை புறக்கணித்து வட்டார வருவாய்துறை அலுவலர்கள் சங்கத்தலைவர் சுராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் வெளிநடப்பு போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட 20 பேர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையிலுள்ள அலுவலர்களை தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரன் காரணம் இன்றி பணியிடமாறுதல் செய்து வருவதால் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை பணியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


இந்நிலையில், காரணம் இன்றி வருவாய்த்துறை பணியாளர்களை பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்ட ஊழியர் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடித்து வரும் கூடுதல் ஆட்சியரை கண்டித்து நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் திடீரென வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை பணியாளர்கள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஞானராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தூர்ராஜன், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை பணியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here