தூத்துக்குடி துறைமுகம் அதிகளவு நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை

0
75
thoothukudi port

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 24 மணி நேரத்தில் அதிகளவு நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல் சரக்கு தளம்-9ல் கடந்த 27-ந்தேதி எம்.வி. ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஓசன் டீரீம் என்ற கப்பலிலிருந்து 56,687 டன் நிலக்கரியை 24மணி நேரத்தில் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இச்சாதனையானது, இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி எம்.வி.மைசிர்னி என்ற கப்பலிலிருந்து 24மணி நேரத்தில் கையாளப்பட்ட அளவான 55,785 டன் நிலக்கரியை விட அதிகமாகும். எம்.வி. ஓசன் டீரீம் கப்பல் இந்தோனேஷியா நாட்டிலுள்ள அதாங் பே என்ற துறைமுகத்திலிருந்து 77,535 டன் நிலக்கரியை வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளது. இக்கப்பலில் வந்த 77,535 டன் நிலக்கரியும் இந்தியா கோக் அன் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும், வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ராமச்சந்திரன் பாராட்டுகளை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here