திறந்தவெளி மலம் கழித்தலற்ற நகரமாக்க கூடுதல் வசதிகள் – தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு

0
65
thoothukudi corporation

தூத்துக்குடி மாநகராட்சி திறந்தவெளி மலம் கழித்தலற்ற நகரமாக்க கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அது குறித்து பொதுமக்கள் தங்கள்கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாநகராட்சி தனி அலுவலர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

’’தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திறந்தவெளி மலம் கழித்தலற்ற நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அடுத்தநிலையான ODF+ சான்றிற்கு விண்ணப்பிக்க ஏதுவாக அனைத்து பொது மற்றும் சமுதாய கழிப்பறைகள் புனரமைக்கப்பட்டு காற்றோட்டம், தண்ணீர் வசதி, மின்வசதி, நாப்கின் எரிப்பான், கண்ணாடி, தானியங்கி கை உலர்ப்பான், போன்ற பல்வேறு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மேற்படி வசதிகளை நல்ல முறையில் பயன்படுத்துவதோடு மேற்படி பொருள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் இவ்வறிவிப்பு வெளியான 15-தினங்களுக்குள் எழுத்து மூலமாக ஆணையர் (ம) தனி அலுவலர் அவர்களுக்கு தெரிவிவிக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here