சாத்தான்குளம் : சொத்து பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதம்

0
166
sathankulam

சாத்தான்குளம், அக்.31:

சொத்து பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சாத்தான்குளத்தில் ஒரு குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

சாத்தான்குளத்தைச் சேரந்தவர் மூக்காண்டி (62). இவர் ஸ்ரீவிஸ்வகர்மா பொதுத தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். குடும்பத்ததுடன் சாத்தான்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் சாத்தான்குளம் அடுத்த அமுதுண்ணாக்குடியில் உள்ளது.

இந்த இடம் தொடர்பாக சாத்தான்குளம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில் இந்த இடத்தில் எதிர் தரப்பினர் தங்களது இடம் என கூறி ஊராட்சியில் தீர்வை பெற்று குடிசை அமைத்ததுடன் மின் இணைப்பும் பெற்றுள்ளனர். மேலும் அந்த இடத்தில் இருந்த உடை மரங்கள் வெட்டி விற்பனை செய்துள்ளனர்.

இதனை அறிந்த மூக்காண்டி, போலீசில் புகார் செய்தார். நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் நிலத்தில் உள்ள உடை மரத்தை வெட்டி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள தீர்வையை ரத்து செய்வதுடன், மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என வலியறுத்தி வந்தார். ஆனால் அவரது புகார் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென தெரிவித்து அவர் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை முன்பு அக்.31ஆம்தேதி முதல் ஒரு வாரம் தொடர் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து சனிக்கிழமை காலை சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு மூக்காண்டி, அவரது மனைவி சுப்புலட்சுமி (50), மகள் சுபிஷாதேவி (7) ஆகியோருடன் தொடர் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பி. பெர்னார்ட் சேவியர் தலைமையில் உதவி ஆய்வாளர் த. சுயம்புலிங்கம் உள்ளிட்ட போலீசார் மூக்காண்டி உள்ளிட்ட 3பேரையும் சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்து சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில் அரசு உரிமையியல் வழக்குரைஞரிடம் கருத்துரு பெற்று ஒரு வாரத்தில் இந்த பிரச்னையை தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆய்வாளர், உறுதியளித்ததையடுத்து ஸ்ரீவிஸ்வகர்மா பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் மூக்காண்டி போராட்டத்தை கைவிட்டு பிரச்னை தீர்க்கப்படாதபட்சத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் மூக்காண்டி உள்ளிட்ட 3பேரையும் விடுவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here