கார்த்திகை திருநாளை முன்னிட்டு விளக்கொளிகளால் ஜொலித்த ஈஷா

0
130
isha
BEST-DL Shrine

கோவையில் உள்ள ஈஷாவில் கார்த்திகை திருநாள் மிக கோலாகலமாக இன்று (டிசம்பர் 10) கொண்டாடப்பட்டது.

BEST-DL Parikrama

ஈஷாவில் மஹாசிவராத்திரி, குருபெளர்ணி, நவராத்திரி, மாட்டு பொங்கல் போன்ற பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கார்த்திகை திருநாள் இன்று மிக கோலாகலமாக

கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தியானலிங்கம், லிங்கபைரவி, சூர்யகுண்டம், சந்திரகுண்டம், நந்தி உள்ளிட்ட இடங்களில் மாலையில் 1,008 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த இடங்கள் விளக்கொளிகளால் ஜொலித்தன.

ஆசிரமவாசிகள், தன்னார்வலர்கள் மட்டுமின்றி ஈஷாவுக்கு வந்திருந்த பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் விளக்குகள் ஏற்றி மகிழ்ந்தனர்.

இதுபோன்றதொரு, ஒரு ஒளி மயமான கார்த்திகை திருநாளில்தான், அதாவது 1999-ம் ஆண்டு கார்த்திகை பெளர்ணமி அன்று தியானலிங்கம் சத்குரு அவர்களால் உலகுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

BEST-DL Inner Parikarma

கார்த்திகை பெளர்ணமியை

BEST-DL Parikrama

முன்னிட்டு நாளை (டிசம்பர் 11) இரவு 7.45 மணியளவில் ஆதியோகியில் திவ்ய தரிசன நிகழ்ச்சியும், இரவு 7 மணியளவில் நந்தி முன்பாக, லிங்கபைரவி ஊர்வலத்துடன் மஹா ஆரத்தியும் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here