ஓட்டப்பிடாரம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கறவை மாடு, ரூ.17.50லட்சம் குழுக்கடன் – மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் வழங்கினார்

0
26
co-oprative sathagar

ஓட்டப்பிடாரம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கறவை மாடு மற்றும் ரூ.17.50லட்சம் குழுக்கடனை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் வழங்கினார்.

ஓட்டப்பிடாரம் தொடக்க வேனாண்மை கூட்டுறவு கடன் வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கறவை மாடுகள் மற்றும் குழுக்கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, வங்கி தலைவர் மாடசாமி என்ற பெரியமோகன் தலைமை வகித்தார். செயலாளர் மேரிபுஷ்பம் முன்னிலை வகித்தார்.

விழாவில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு குழுக்கடனாக ரூ.17.50 லட்சம் மற்றும் 34பேருக்கு கறவை மாடுகளை வழங்கினார்.

இதில், மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் வெற்றிவேல், மேற்பார்வையாளர் செல்வராஜ், நிர்வாகக்குழுவினர், மகளிர் குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here