கோவில்பட்டி : கனிமொழி தலைமையில் மக்கள் குறை கேட்பு – கீதாஜீவன் தகவல்

0
73
geethajeevan

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் அறிக்கை :

’’தூத்துக்குடி நாடாளுமன்ற உறுதிப்பினரும், தி.மு.க மக்களவைக் குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தான் வெற்றி பெற்ற நாள் முதல் தொடர்ந்து ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்தும் வருகிறார்.

அதனடிப்படையில் 01.11.2020 அன்று விளாத்திகுளம் தொகுதி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்லாகுளம், சூரங்குடி, தத்தநேரி, அரியநாயகபுரம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து 03.11.2020 செவ்வாய்கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திட்டங்குளம் கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கையும், மாலை 5.30 மணிக்கு நாலாட்டின்புதூா் கிராமத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுராமன்பட்டி கிராமத்திலும், மாலை 6.30 மணிக்கு வள்ளிநாயபுரம் கிராமத்திலும், 7.00 மணிக்கு கடலையூா் கிராமத்திலும், 7.30 மணிக்கு திப்பனூத்து கிராமத்திலும் பொதுமக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

எனவே பொதுமக்கள் அனைவரும் இக்குறை கேட்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நேரில் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு கீதாஜீவன் அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here