ஸ்டாலின் போராட்டம் நடத்திய பிறகே 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு கையெழுத்தானது – கனிமொழி

0
81
kanimozi dmk

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாரளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி எம்பி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். முன்னதாக வாகைக்குளம் விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசியபோது அவர், ’’மருத்துவ இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம்இட ஒதுக்கீட்டில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போராட்டம் நடத்திய பிறகுதான் கையெழுத்து போட்டுள்ளனர்.

ஆளுநர் எதற்காக இவ்வளவு அலைக்கழித்தார், பிறகு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஆளுநர் காலதாமதம் செய்தது, தமிழக மக்களுக்கும் தவறு இழைத்திருக்க கூடிய அநீதி’’ என தெரிவித்தார்.

அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயக்கொடி சுப்பிரமணியன் இளையராஜா உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here