குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசக அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம்

0
31
collectr news

சமூக பாதுகாப்புத்துறை குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தை பேணுதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வெளியீடு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் சந்தீப் நந்தூரி, சேமிப்பு கணக்கு புத்தகங்களை வெளியிட அதனை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது: சமூக பாதுகாப்புத்துறையின் மூலமாக குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 20ஆயிரம் அஞ்சலக பாஸ் புக்குகள் அஞ்சல் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பாஸ் புக்குகள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 4 தலைமை அஞ்சலகங்கள் மூலம் அனைத்து அஞ்சலகத்திலும் கணக்கு துவங்கும் பொதுமக்களிடம் வழங்கி, மக்களிடத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கிடவேண்டும் என்றார்.

இதில், அஞ்சலக கோட்ட மக்கள் தொடர்பு ஆய்வாளர் நாகராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மகராசி, பாதுகாப்பு அலுவலர்கள் சுரேத்வானி, ஜேம்ஸ் அதிசயராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here