பேட்மாநகரம் : ஆக்கிரமிப்பு அரசு நிலத்தை மீட்க கோரிக்கை

0
139
collector news

பேட்மாநகரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவதை தடுத்திடவேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேட்மாநகரம் முத்துசாமிபுரத்தை சேர்ந்த சமூகஆர்வலர் முத்துராமலிங்கம் தலைமையில் அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேட்மாநகரத்தில் அரசுக்கு சொந்தமான காலியிடங்கள் அதிகமான அளவில் உள்ளது. இதில், அரசு கால்நடை மருத்துவமனைக்கு அருகிலுள்ள காலியிடம் தமிழக ஆளுநர் மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை பெயரில் இருந்து வருகிறது.

இந்நிலையில், அரசுக்கு சொந்தமான இந்த காலி இடத்தினை தனியார்கள் சிலர் பிளாட் போட்டும், வீடுகள் கட்டியும் விற்பனை செய்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான இந்த காலியிடங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வரும் நிலையில், இதில் சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அரசு நிலங்கள் பறிபோய் வருகிறது.

எனவே, மேற்படி அரசுக்கு சொந்தமான சர்வே எண்ணிலுள்ள காலியிடங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பாதுகாத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here