தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்திட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 13ம் தேதி தூத்துக்குடி வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், முதல்வரின தாயார் திடீரென இறந்த காரணத்தால் இந்த வருகை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வர் வரும் 10ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்கு மறுநாள் 11ம் தேதி தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருவதாக அறிவிக்கப்பட்டு அந்த நிகழ்ச்சிகள் அதிரடியாக ரத்தான நிலையில் 3வது முறையாக இந்த மாதம் 11ம் தேதி அவர் தூத்துக்குடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு முதல்வர் வருவதால் அதிமுகவினர் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை செய்வதா- இல்லை பண்டிகைகைக்கான ஏற்பாடுகளை செய்வதா? என்ற குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.