அய்யா வைகுண்டசுவாமி விழாவை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை -தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

Vaikundasawmy

அய்யா வைகுண்டசுவாமி விழாவை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை -தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

அய்யா வைகுண்டசுவாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வரும் 04.03.2026 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : 

தூத்துக்குடி மாவட்டம், அய்யா வைகுண்டசுவாமி 194 வது பிறந்தநாள் விழா மாசி மாதம் 20-ம் தேதி (04.03.2026) அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு 04.03.2026 புதன்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.03.2026 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.