சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை: நன்மையும் நீதியும் வெல்லும் திருநாள்!
Saraswathi Poojai
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் வாழும் இந்தியர்களால் நவராத்திரி விழா பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. துர்கா தேவியை வழிபடும் ஒன்பது நாள் விழாவின் ஒரு பகுதியாக, கல்வி, கலை, அறிவு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். அதேபோல், மனிதர்களின் உழைப்புக்கும் வாழ்வாதாரத்துக்கும் துணை நிற்கும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள், தொழில் உபகரணங்கள் ஆகியவற்றுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது.
தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டுவதே இந்த விழாக்களின் முக்கியமான ஆன்மிகச் செய்தியாகும். இதிகாச மரபுகளின்படி, மகிஷாசுரனை துர்கா தேவி வென்றதையும், ராவணனை ராமர் வென்றதையும் நினைவுகூரும் விஜயதசமி, தீமையின் மீது நன்மை பெறும் வெற்றியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
கல்வி கற்கத் தொடங்குவது, குழந்தைகளுக்கு ஏடு தொடங்குவது, புதிய தொழில் தொடங்குவது, புதிய முயற்சிகளை ஆரம்பிப்பது எனப் பல்வேறு நற்செயல்களுக்கு விஜயதசமி சிறப்பான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அறிவு வளரட்டும்; உழைப்பு சிறக்கட்டும்; அநீதி அகலட்டும்; நியாயமும் நன்மையும் வெல்லட்டும்!
nadunilai.com