சமீபத்திய சாதி மோதல்களுக்கு சமீபத்திய சினிமா படங்களும் காரணம்

Sathi mothalai thoondum cinema

சமீபத்திய சாதி மோதல்களுக்கு சமீபத்திய சினிமா படங்களும் காரணம்

சமீபத்திய சாதி மோதல்களுக்கு சமீபத்திய சினிமா படங்களும் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது. 

தொழில் அடிப்படையில் உருவான பிரிவுகள் படிப்படியாக ஏற்றதாழ்வுகளாக பார்க்கும்போது அது சாதி மோதலுக்கு வழி வகுத்தன. பிரிவுகளை பெரிதுபடுத்தாமல் இணைந்து வாழும் முறையே பிரச்னை இல்லாமல் வாழ வழி வகுக்கும். அப்படியானால் பிரிவுகள் குறித்து மறதி அனைவர் மனதிலும் வரவேண்டும். அதுதான் மிகப்பெரிய மருந்து. ஆனால் இந்த பிரிவுகளை வைத்தே அரசியல் செய்ய நினைக்கும் சிலர், இதனை மறக்கவிடாமல் பாதுகாக்க துடிக்கின்றனர். அதாவது சாதி பிரச்னைக்கு எதிராக அரசியல் செய்வோருக்கு சாதி பிரச்னை இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வண்டி ஓடும். மக்கள் அனைவரும் எந்த பிரச்னையும் இல்லாமல் இணைந்து வாழ்ந்துவிட்டால் இவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். அதுக்காக குறிப்பிட்ட கட்சிகளை சாதி அடையாளப்படுத்தி காண்பிப்பதுடன், பழைய சாதிமோதல்களை நினைவுபடுத்துவதன் மூலம் அந்த குறிப்பிட்ட கட்சிகளுக்கு செல்வாக்கு கிடைக்காமல் பார்த்து கொள்ளலாம் என்று நினைக்கிறது சில அமைப்புகள். 

அப்படிப்பட்ட அமைப்புகள் சினிமாக்கள் மூலமும் இன்னும் பல செயல்கள் மூலமும் ஆதிக்க சாதி, ஆதிக்கம் இல்லாத சாதி என்று மக்களை பிரித்து காண்பிக்க முயற்சி செய்கிறது. ஆதிக்கம் இருக்கிறது. அது குறிப்பிட்ட சாதியிடம் இருக்கிறது. அதை குறிப்பிட்ட கட்சி ஆதிரிக்கிறது என்பது போன்று காட்டவே சில முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. நீண்ட காலமாக சாதி பிணக்குகள் எதுவும் இல்லாமல் மறந்து வாழும் மக்கள் மத்தியில் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மோதல்களை நினைப்பு படுத்தும் வகையில் சினிமா படம் எடுத்து அதனை இளைய தலைமுறைகள் பார்க்கும்படி செய்கின்றனர். இதன் மூலம் பாதிக்கப்படும் சமுதாயமாக காண்பிக்கும் சமுதாய இளைஞர்கள் குறிப்பிட்ட ஆதிக்க சமூகத்தின் மீது விரோதம் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் விரோதம் குறிப்பிட்ட கட்சிகளை எதிர்ப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு வேண்டிய கட்சிகள் லாபம் அடையும் என்று நம்புகிறார்கள் போல் தெரிகிறது. 

என்றோ முடிந்து போன சமூதாய ஏற்றத்தாழ்வுகளை நினைவுபடுத்தி ஓட்டுவாங்க துடிக்கும் சிறுபுத்திக்காரர்களால்தான் சமீபகாலமாக சாதி மோதல்கள் ஏற்பட காரணமாக அமைகிறதோ என்று சந்தேகம் வருகிறது. வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை மையமாக வைத்தே பல சினிமாக்கள் எடுக்கப்பட்டுவிட்டன.  அது சாதி பிரிவுகளை அதிகப்படுத்துகிறது. இணைந்து வாழும் மக்களிடையே பகைமை ஊட்டுகிறது. கோபம் கொள்ளும் இளைஞர்களை உருவாக்குகிறது. அந்த வகையில் மாணவர்கள் கூட மாட்டிக் கொள்ளும் ஆபத்து வந்திருக்கிறது. இதெற்கெல்லாம் பல காரணங்கள் இருக்கலாம். அதில் சமீபத்திய சினிமாக்களும் காரணம் என்பதை மறுக்கமுடியவில்லை.