அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு விண்ணப்பிக்க 21.4.2025 கடைசி நாள்

Tnstc news

அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு விண்ணப்பிக்க 21.4.2025 கடைசி நாள்

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணிகளுக்கான காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்க வேண்டியது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை 682, விழுப்புரம் 322,கும்பகோணம் 756, சேலம் 486,கோவை 344,மதுரை 322,திருநெல்வேலி 362 என டிரைவர், கண்டக்டர் பணிகள் மொத்தம் 3274 இடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. 

இந்த பணிகளுக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கூடுதல் தகுதியாக கனரக வாகன டிரைவிங், கண்டக்டர் லைசென்ஸ், 18 மாத அனுபவம், தமிழில் படிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். 1.7.2025ன் படி வயது 24 முதல் 40 வரை இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெர்டுக்கப்படுவர். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1180 வசூலிக்கப்படும். இதில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.590 ஆகும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 21.04.2025. இது குறித்த விபரங்களை அறிய arasubus.tn.gov.in யை பார்க்க வேண்டும்.