தூத்துக்குடியில் இ சேவை மைய ஆபரேட்டர்களுக்கு பயிற்சி

e sevai

தூத்துக்குடியில் இ சேவை மைய ஆபரேட்டர்களுக்கு பயிற்சி

தூத்துக்குடியில் இ சேவை மைய ஆபரேட்டர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 

தமிழ் நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்கும், அரசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள தூரத்தை குறைக்கவும் புதிதாக இ சேவைய மையங்களை தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி இ சேவை மையம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் வாய்ப்பை அரசு வழங்கியது.  புதிதாக இ சேவை மையத்துக்கான ஐடி வாங்கியவர்கள் பணியை தொடங்கியிருக்கின்றனர். அப்பணிக்கான விபரங்களையும், விதிமுறைகளையும் ஆபரேட்டர்களிடம் விளக்க முடிவு செய்த அரசு, அவர்களுக்கு பேட்ஜ் பேட்ஜாக பயிற்சி அளித்து வருகிறது. 

அந்த வகையில் இன்று தூத்துக்குடியில் செயிண்ட் மேரீஸ் கல்லூரியில் வைத்து இ சேவை ஆபரேட்டர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் அழைக்கப்பட்ட ஆபரேட்டர்கள் கலந்து கொண்டிருந்தனர். மாவட்ட அலுவலர் சிவகுமார், பயிற்சியாளர் வீரபாகு ஆகியோர் விளக்கினர். பயிற்சியில், அப்ளே செய்வது எப்படி என்பது முதல் அதில் உள்ள டெக்னிக்கல் தேவைகள் என்ன என்பது விளக்கப்பட்டது. 

இ சேவை மையங்கள் பொதுமக்களுக்கு எப்படியெல்லாம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்?. இ சேவை மையங்களை எந்த வகையில் லாபகரமாக இயக்க முடியும்?. எந்தந்தமாதிரியான விதிமுறைகளை இ சேவை மைய ஆபரேட்டர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.