தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து கூற மனமில்லாத முதல்வர் மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன் சாடல்
Dmk - Bjp

ஆங்கில புத்தாண்டு, தெலுங்கு புத்தாண்டு உள்ளிட்ட பல்வேறு புத்தாண்டு தினங்களுக்கு வாழ்த்து கூறி மகிழும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் முதல் நாளை கண்டு கொள்வதில்லை. அந்த நாளில் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடும் முதல்வர், தமிழ் புத்தாண்டு குறித்து எந்தவித அசைவும் கொள்வதில்லை என்கிற குற்றசாட்டு தமிழகத்தில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் இன்று சித்திரை முதல் நாள் (14.4.2025) தமிழ் வருட பிறப்பு நாள் விழா கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனாலும் வழக்கம்போல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழை வெறும் அரசியல் பிழைப்புக்கான மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது. ஆங்கில புத்தாண்டுக்கு வாழ்த்து கூறும் முதல்வர் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து கூறாமல் புறக்கணிக்கிறார். தமிழர்களின் கலாச்சார கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூற முதல்வருக்கு மனமில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.