கடலுக்கு செல்லும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் - திருவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் கோரிக்கை
Uoorvasi Amirtharaj Mla
கடலுக்கு செல்லும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று திருவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏவும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், திருவைகுண்டம் அணைக்கட்டில்யிருந்து கடலுக்கு தண்ணீர் வீணாக செல்வதற்கு முன்பாக தொகுதியில் உள்ள சனையன்னேரி கால்வாய்மூலம் ராமசுப்புரமணியபுரத்தில் உள்ள சனையன்னேரிகுளத்திற்கும் புத்தன்தருவைகுளத்திற்கும் பிரியும் இடத்தில் அரசின் விகிதாச்சார முறையில் புத்தன்தருவைகுளத்திற்கு வைரவன்தருவைக்குளத்திற்கும் தண்ணீர் வழங்கப்படவில்லை என்று அந்தபகுதி விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை தாங்கள் நேரில் ஆய்வு செய்து புத்தன்தருவை , வைரவன்தருவை குளங்கள் மற்றும் பேய்க்குளம், பெருங்குளம் , ஆறுமுகமங்கலம்குளம் , சிவகளை ஆகிய கடைமடைகுளங்கள் வரை அனைத்து குளங்களையும் முழுமையாக நிரப்புவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.