ஸ்டெர்லைட் ஆலையால் எந்த தீங்கும் இல்லை - ஊழியர்கள் சர்டிஃபிக்கேட்
sterlite
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் எந்த தீங்கும் இல்லை என்று அதன் பணியாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன் வந்த அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் இருபது ஆண்டுகளுக்கு மேல் இயங்கியது ஸ்டெர்லைட் காப்பர் ஆலை. காப்பர் உற்பத்தியில் இந்தியாவை உயர்ந்த இடத்தில் வைக்க இந்த ஆலை உதவியது என்று கூறலாம். அதாவது, காப்பர் உற்பத்தியில் சீனாவோடு இந்தியா போட்டிபோட இந்த ஆலை பெரிதும் உதவியது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு சிறிது காலத்திற்கு முன்னர் 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் உருவானது. ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை செய்ய சென்றனர். அப்போது போலீசுக்கும், போராட்டக்காரர்களுகும் இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் போராட்டக்காரர்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. அதனைத் தொடர்ந்து ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகம் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. ஆலையில் பணி புரிந்து வேலையை இழந்தவர்கள், ஆலையை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள், அலுவலக பணியாளர்கள் என்று பல்வேறு தரப்பினரும், ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போதும் ஆலையின் அலுவலக பணியில் உள்ள பலர் ஸ்டெர்லைட் ஆலை குறித்து எழுப்பப்படும் குற்றசாட்டுகளில் உண்மையில்லை என்றும், அதில் பணிபுரியும் எங்களுக்கு எதுவுமே ஆகவில்லை என்றும் சமீபத்திய மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.
இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையில் பல ஆண்டுகளாக பணி புரிந்த ஜெயா கூறுகையில், கடந்த 2018 மே மாதம் ஒரு குற்றச்சாட்டை உருவாக்கி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இயக்கம் தடைப்பட்டு மூடப்பட்டது. 20 வருடங்களுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்து வருகிறேன். முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால் ஆலையில் பணி செய்பவர்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருக்கிறது. குழந்தைகள் கருவில் உயிர் பிரிகிறது என்ற குற்றச்சாட்டு வைத்திருந்தார்கள். அது துளி அளவும் உண்மை இல்லை.
ஆலையில் 150 லிருந்து 200 வரை என்னுடன் பெண்கள் ஸ்டெர்லைட் ஆலையில் பணி செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் காலகாலத்தில் திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று நல்ல நிலைமையில் உள்ளனர். எந்த ஒரு குறைபாடும் கிடையாது. ஸ்டெர்லைட் ஆலையால் நோய் வரும் என்றால் ஸ்டெர்லைட் ஆலையில் பணி செய்தவறுக்கு வந்திருக்க வேண்டும். அங்குள்ள குடும்பத்தாருக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. மக்கள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை நம்பக்கூடாது. அந்த பயத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்றார்.
இதுகுறித்து, ஆலையில் 20 வருடமாக பணி செய்து வரும் மாரியப்பன் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையால் பிரச்சனை என்றால் முதலில் ஆலையில் பணி செய்த எங்களை தான் பாதித்திருக்கும் ஆனால் அப்படி அல்ல. ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நாங்கள் ஆப்பரேட் பண்ணக்கூடிய அனைத்தும் குறிப்பாக, டெக்னாலஜி வேர்ல்டு நம்பர் ஒன் டெக்னாலஜி காப்பர் உற்பத்தியில். சுற்றுப்புற சூழ்நிலை பேணி காக்க வேண்டும் என்ற ஒரே உயரிய நோக்கத்திற்காக அனைத்து டெக்னாலஜி அமெரிக்காவிலிருந்து உயரிய தொழில்நுட்பங்களைக் கொண்டு சுற்றுப்புற சூழலை பேணிக்காட்த்து வருகின்றோம். இங்கு இருக்கின்ற சல்பியூரிக் ஆசிட் பிளான்ட் கனடா டெக்னாலஜி, பாஸ்பாரிக் டெக்னாலஜி ப்ரைஸில், குறிப்பாக டெக்னாலஜி பற்றி குறிப்பிடுவது ஏனென்றால் பன்னாட்டு தொழிற்சாலையாக இது கருதப்படுகிறது.
மூன்று வருடம் முன்னர் கொரானா நோய் தொற்று வரும் போது ஸ்டெர்லைட் ஆலையில் இரண்டு ஆக்சிஜன் பிளான்ட் 7 நாட்களில் நம்மளுடைய பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு வந்து கிட்டத்தட்ட மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுடைய வாழ்க்கை மறு பிழைப்பு பிழைத்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் இருப்பதால் குறுகிய காலங்களில் இந்த பிளான்ட் எந்த வித பிரச்சனை இல்லாமல் சரியான விகிதத்தில் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது. உயரிய தொழில்நுட்பங்களைக் கொண்டு அனைத்து விதத்திலும் நடத்தி வந்தோம்.
கம்பெனியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைத்தனர். அதாவது, கேன்சர் வரும், தொழிற்சாலை கழிவுகளை கடலில் கலக்கின்றனர்.. இதனால் மழை பெய்யவில்லை ஆகிய பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படை ஆதாரங்கள் இன்றி முன் வைத்தனர். ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமாக பல்வேறு உண்மைகளை அறிவியல் பூர்வமாக நாம் பல்வேறு காலகட்டங்களில் நம்முடைய தூத்துக்குடி நகரத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களையும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து தரப்பு நியாயங்களை தெளிவுபடுத்தி உள்ளோம். தூத்துக்குடியில் மட்டுமல்லாது தூத்துக்குடி கடற்கரை கிராம மக்கள் கம்பெனியை சுற்றி இருக்கின்ற 21 கிராம மக்கள் அனைத்து மக்களையும் கம்பெனி உண்மை தன்மை புரிந்து கொண்டு திறக்க வேண்டும் என்று உயரிய நோக்கத்தில் ஒன்றிணைந்து இதில் பாடுபடுகிறோம்.. 4,000 மக்களுக்கு வேலை இல்லாதது வருத்தமான விஷயமாக உள்ளது.. பல்வேறு காலகட்டங்களில் எங்கள் தரப்பு நியாயங்களை கூறி இருக்கின்றோம்.வியாபாரம் செழிக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞர்களும் படித்தவர்கள் ஸ்டெர்லைட் மட்டுமல்லாது பல கம்பெனிகள் வரவேண்டும். நகரம் மென்மேலும் வளர வேண்டும் என்ற உயர்நோக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என்றார்.
ஸ்டெர்லைட் ஆலையில் 15 வருடமாக பணிபுரிந்து வரும் மருத்துவர் கைலாசம் கூறுகையில், ஆலையில் பணிபுரியும் தனிமனித பாதுகாப்பை 6 மாதம், 3 மாதம், ஒரு சில பரிசோதனை இரண்டு வருடங்கள் என்று உடல் நலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்... இதுநாள் வரை தொழிற்சாலையால் வியாதி என்று வரவில்லை. மேலும், பொது மக்களுக்கும் மருத்துவ வசதி உதவி செய்து வருகிறோம். சிறப்பு சிகிச்சைகள் தேவைப்பட்டால் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி உதவி செய்கின்றோம். ஆனால் எங்கள் மீது பொய் குற்றச்சாட்டு வைக்கின்றன.. எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.. பசுமை தீர்ப்பாயம் ஆகட்டும் பல நீதிமன்றங்களாகட்டும் எழுத்துப்பூர்வமாக நாங்கள் எடுத்து வைத்துள்ளோம்.. தூத்துக்குடி மற்றும் தொழிற்சாலைகள் முன்னேற்றத்துடன் செழிப்பாக வேண்டும் என்றார். .
தமிழ்நாடு பொது சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் நீண்டகால பணியாளர்கள் தங்களது மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.