படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் பலி - பா.ரஞ்சித் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

cinema news

படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் பலி - பா.ரஞ்சித் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

ரஜினி உள்பட பிரபல நடிகர்களை வைத்து புரட்சிகரமான படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து வேட்டுவம் என்ற படத்தை எடுத்து வருகிறார். இதில் அட்டகத்தி தினேஷ், சோபிதா துலிலா, லிஸி ஆண்டனி, கலையரசன், ஷபீர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

காரைக்குடியில் இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் நாகை மாவட்டம் விழுந்தமாவடி என்ற ஊரில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நேற்று நடந்தது. அப்போது காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் பகுதியை சேர்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ்(52) காரில் தாவி செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. எதிர்பாராவிதமாக கார் விபத்தில் மோகன்ராஜ் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை, அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். 

இச்சம்பவம் குறித்து கீரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுக்கிடையே பா.ரஞ்சித் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கவனக்குறைவு அல்லது அலட்சியத்தால் படப்பிடிப்பு நடத்தி ஒரு உயிர் போக காரணமாக இருந்ததாக கூறி 4 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.