அரசு, அரசு உதவி பெறும் ஐடிஐக்களில் மாணவர்கள் சேர்க்கை - மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு
Tuty Collector
தூத்துக்குடிமாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ஆம்ஆண்டில்தூத்துக்குடிமாவட்டத்திலுள்ளதூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர், நாகலாபுரம் மற்றும் ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசுஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும்முறை: www.skilltraining.tn.gov.in
கல்வித்தகுதி: எட்டாம்வகுப்பு/பத்தாம்வகுப்பு/2021-ல்பத்தாம்வகுப்புதேர்ச்சிபெற்றிருப்பின்ஒன்பதாம்வகுப்புமதிப்பெண்பட்டியல். விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக்கட்டணத்தொகையானரூ.50/- விண்ணப்பதாரர்Debit Card/Credit Card/Net Banking/UPI (GPay,Phonepe,etc.)வாயிலாகமட்டுமேசெலுத்தவேண்டும்.
இணையதளம்வாயிலாகவிண்ணப்பம்பதிவுசெய்யகடைசிநாள்: 03.06.2026.
மதிப்பெண்அடிப்படையில்நடைபெறும்இணையதளகலந்தாய்வுக்கானதரவரிசைப்பட்டியல்மற்றும்கலந்தாய்வுகுறித்தவிவரங்கள்கடைசிதேதிக்குப்பிறகுஇதேஇணையதளத்தில்வெளியிடப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் 8-ஆம்வகுப்பு/ பத்தாம் வகுப்பு மதிப்பெண்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளத்திலுள்ள தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சிநிலையம் (9499055810/8511154977), வேப்பலோடைஅரசுதொழிற்பயிற்சிநிலையம்(9499055814/8511154977), திருச்செந்தூர்அரசுதொழிற்பயிற்சிநிலையம்(9499055812/8778333588)நாகலாபுரம்அரசுதொழிற்பயிற்சிநிலையம்(04638-242687/9499055816),ஏரல்அரசுதொழிற்பயிற்சிநிலையம்(7418165115/9488454549)மற்றும்தூத்துக்குடிமாவட்டதிறன்பயிற்சிஅலுவலகத்திற்கு (9499055809)நேரில்வந்தும்விண்ணப்பிக்கலாம்.
மேலும், அரசுதொழிற்பயிற்சிநிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மாதந்தோறும் வருகை நாட்களுக்கு ஏற்பஉதவித்தொகைரூ.750/- கட்டணமில்லாபேருந்து சலுகை, விலையில்லாமிதிவண்டி,மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத்தேவையான நுகர்பொருட்கள் வழங்கப்படுவதாகவும், அரசுதொழிற்பயிற்சிநிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவசஉண்டி, உறைவிடவசதியும் உள்ளது எனவும், தகுதியுள்ள மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ்மாதந்தோறும்ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
nadunilai.com