தூத்துக்குடி தெருவில் விற்கப்படும் ஐஸ்ஸில் ஊக்க மருந்தா ? - மாணவர்களின் பெற்றோர் கொதிப்பு

Thoothukidi News

தூத்துக்குடி தெருவில் விற்கப்படும் ஐஸ்ஸில் ஊக்க மருந்தா ? - மாணவர்களின் பெற்றோர் கொதிப்பு

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் தள்ளுவண்டி விற்பனை செய்யும் ஒரு வடமாநில வியாபாரியிடம் அப்பகுதியில் சிலர் தகராறு செய்து கொண்டிருந்தனர். அதற்கான காரணம் கேட்ட போது, குறிப்பிட்ட சில வியாபாரிகள் விற்கும் ஐஸை அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனராம். இது வழக்கமாக நடந்து வருவதுதான் என்றாலும் அந்த ஐஸை சாப்பிடும் மாணவர்கள் பல்வேறு வகையான பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். 

ஒரு முறை அந்த ஐஸை வாங்கி சாப்பிடும் மாணவர்கள் வேறு ஐஸ் உள்ளிட்ட வேறு எந்த பொருட்களையும் விரும்புவதில்லையாம். மேலும் ஒரு வித சோர்வாக ஆகிபோகும் மாணவர்களை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனைவைத்துதான் அவர்கள் அவ்வியாபாரியை அப்பகுதியில் ஐஸ் விற்க கூடாது என்றும் அங்கிருந்து கிளப்பிவிட்டனர். எனவே இது குறித்து உணவு பாதுகாப்பு துறை சம்பந்தபட்ட அதிகாரிகள் இதுபோன்ற வியாபாரிகள் விற்கும் உணவு பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.