நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா!
nazareth

நாசரேத்,பிப். 20:நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல் லூரியில் 17வதுபட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரிமுதல்வர்முனைவர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். தாளாளர் வழக்க றிஞர் ஜெயக்குமார் ரூபன் சிறப்புவிருந்தினரை அறிமு கப்படுத்தி பேசினார்.கல்லூ ரியின் நிர்வாக அதிகாரி வினோதா உறுதிமொழி வாசித்தார். விழாவிற்கு தூத்துக்குடி நாசரேத் திரு மண்டல உப தலைவர் வி.எம்.எஸ்.தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தூய யோவான் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் முனைவர் கருணாகரன் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றி 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவி களுக்கு பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருமண்டல நிர்வாகஸ்தர்கள் குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்டக், திருமண்டல 'லே' செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன்,திருமண்டல உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகளின் மேலா ளர் பிரேம்குமார் ராஜாசிங், கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், திருமண் டல பெருமன்ற உறுப்பினர் கள் நாசரேத் சேகர கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் கல்லூரி நிர் வாக அதிகாரி, பணியாளர்கள் செய்திருந்தனர்.