தமிழக தோட்டக்கலைதுறை, அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய செயல்முறை விளக்க முகாம்

Amirtha

தமிழக தோட்டக்கலைதுறை, அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய செயல்முறை விளக்க முகாம்

தமிழக தோட்டக்கலை துறையுடன் இணைந்து அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்முறை விளக்க முகாம் நடத்தினர். 

அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவியர் ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி அனுபவத் திட்டம்- கிராமப்புற தங்குதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான நவீன யுக்தி செயல்முறை விளக்க முகாமை தமிழக தோட்டக்கலை துறை விஞ்ஞானிகளுடன் இணைந்து நடத்தினர்.

இந்நிகழ்வில், வேளாண்மை உதவி இயக்குநர் அனந்தகுமார், துணை வேளாண்மை அலுவலர் திரு. மோகனசுந்தரம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி. மேகலா தேவி, அட்மா தலைவர் திரு. சுரேஷ்குமார்  மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் திரு. முத்து லோகநாதன் ஆகியோர் விவசாயிகளின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற தீர்வுகளை வழங்கினர். மேலும், ' பையோ ஸ்டார் ' உரத்தின் முக்கியத்துவத்தை கூறி, விவசாயிகளுக்கு அதை வழங்கினர். அதன் பிறகு, உழவன் செயலியை பயன்படுத்தும் முறை, அதன் பயன்கள் மற்றும் அங்கக விவசாய சான்றிதழை குறித்து விவரித்தனர்.

இதை தொடர்ந்து, அமிர்தா வேளாண் கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள், பிளான்டிஸ் செயலி மற்றும் 3ஜி சாற்றை பற்றிய செயல்முறை விளக்கங்களை அளித்தனர். மேலும், வேளாண் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தகவல் மூலையை கண்டு, பாராட்டினர். 

கல்லூரி முதல்வர் முனைவர். சுதீஷ் மணலில் அவர்களின் தலைமையிலும், பேராசிரியர்கள் முனைவர் சத்ய பிரியா, முனைவர். பிரியா, முனைவர். பார்த்தசாரதி, முனைவர். மகேசன், ஆகியோரின் ஆதரவுடன் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.