அதிகார பூர்வமாக அண்ணாநகர் என்றாகுகிறது டூவிபுரம் மேற்கு.! - தூத்துக்குடி மாநகராட்சியில் தீர்மானம்
Thoothukudi

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. அதற்கு மேயர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயா் ஜெகன் பெரியசாமி, தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பொதுமக்களிடம் குறை தீர்க்கும் முகாம் நான்கு மண்டலங்களிலும் 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுகிறது. மாநகராட்சியில் 1700 புதிய சாலைகள் புதிதாக போடப்படவுள்ளது. அண்ணா பேருந்து நிலையம் கீழ்தளத்தில் பேருந்துகள் நிறுத்தப்படுகிறது. இரண்டு மாடிகள் ஷாப்பிங் மாலாக உள்ளது. 3வது தளம் தனியாா் பங்களிப்புடன் நவீன படுத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சிக்கு 50 ஏக்கர் இடம் இருக்கிறது. அந்த இடங்களில் மரங்கள் நடப்பட்டு, குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மழை காலங்களிலும் பாதிப்புகள் கண்டறிந்து அதனை சரி செய்து வருகிறோம். எதிர்காலங்களில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாத அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஹைமாக்ஸ் லைட்டு மாநகராட்சி பகுதியில் ஐந்து இடங்களில் வருகிறது. மேலும் அங்கன்வாடி மையங்கள் புதியதாக கட்டப்பட உள்ளது. மாதா கோவில் அருகில் உள்ள பயன்படுத்தப்படாமல் இருக்கும் இடத்தில் அழகு படுத்தப்பட உள்ளது. மகளிருக்கு பூங்கா அமைக்கப்படுகிறது. ஜிம் அமைக்கப்படுகிறது. அதுபோல் எம்ஜிஆர் பூங்காவிலும், ராஜாஜி பூங்காவிலும் நடைபாதையுடன் கூடிய ஜிம் அமைக்கப்படுகிறது. 2022ம் ஆண்டு அண்ணாநகர் பகுதி பெயர் மாற்றம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது நடைமுறையில் வரவில்லை. தற்போது டூவிபுரம்மேற்கு என்று மாநகராட்சியில் உள்ளது. மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று இனிவரும் காலங்களில் அண்ணா நகர் என்று மாநகராட்சியில் உள்ள அனைத்து ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நீதிமன்றம் அருகில் உள்ள சுகாதார மையம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுபோல அண்ணா பேருந்து நிலையமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் ஐந்து கழிப்பறைகளை நிபந்தனையின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. சத்யா நகரில் புதியதாக டாய்லெட் கட்டப்படுகிறது. ராஜபாண்டி நகரில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. லேபர் காலனியிலும் புதியதாக கழிப்பறை கட்டப்பட உள்ளது. அதுபோல அதன் அருகில் உள்ள சுனாமி காலனியிலும் டாய்லெட் கட்டப்பட உள்ளது. இந்த டாய்லெட்டுகளையும் மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கும் என்று பேசினார்.
ஒப்பந்த ஊழியர்கள் பணி நீட்டிப்பு, கழிப்பறை பராமரிப்பு பணி ஒப்பந்தம் நீட்டிப்பு உள்ளிட்ட 30 தீர்மானம் நிறைவேற்றிய பின் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது கவுன்சிலர்கள் சிலர் பேசுகையில், இதுவரை நிறைவேற்றிய பல பணிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய சில கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.
பின்னர் மேயர் ஜெகன்பெரியசாமி பேசுகையில், 1995-ல் இருந்த மாநகராட்சிக்கும் நாம் பொறுப்பேற்ற பின் நடைபெற்ற பணிகளுக்குப் பின் 2025-ல் வளர்ச்சி அடைந்துள்ள மாநகராட்சியையும் எல்லோரும் அறிவீர்கள். கடந்த அதிமுக ஆட்சியில் செய்த பல தவறுகளை நாம் ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம். அதிலும் குறிப்பாக நிறுத்திவைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை முறைப்படுத்தி உள்ளோம். 24 மணி நேரமும் பல பகுதிகளுக்கு குடிதண்ணீர் வழங்கி வருகிறோம். மாநகராட்சி உருவாகும் வகையில் பணிகள் மேற்கொண்டுள்ளோம். மாசு இல்லாத மாநகரை உருவாக்கி கொண்டு வந்துள்ளோம். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் பல்வேறு கட்டமைப்புகளை இன்னும் முறைப்படுத்த வேண்டி உள்ளது. வளர்ந்து வரும் மாநகரப் பகுதிகளுக்கு ஏற்ப மக்களின் நெருக்கடிகளையும் கருத்தில் கொண்டு எந்த திட்டம் வேண்டும் எது தேவையில்லை என்பதையெல்லாம் கருத்துக்கள் கேட்கப்பட்டு தான் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இருக்கின்ற பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. புதிதாக அமைக்கப்படுகின்ற பூங்காக்கள் எல்லோருக்கும் பலன் கிடைக்கும் வகையில் அதற்கேற்றாற்போல் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்கிறோம். சில பூங்காக்களுக்கு வரும் பொது மக்களுக்கு ஏதாவது அச்ச உணர்வு ஏற்படும் என்றால் அந்த பூங்காக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். சாலைகளை பொறுத்த வரை 90சதவீதம் நிறைவடைந்துள்ளது. கால்வாய் பணிகளை பொறுத்த வரையில் வடக்கு மேற்கு பகுதிகளில் விரைவுபடுத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 60 வார்டுகளுக்கும் எவ்வித பாரபட்சமுமின்றி பணிகளை துரிதமாக செய்து வருகிறோம். கடந்த காலங்களில் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்த பழைய குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு அதில் குறிப்பாக சண்முகபுரம், டூவிபுரம் பகுதிகளுக்கு முறையான குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடைகாலமாக இருப்பதால் அனைத்து மக்களுக்கும் தடையின்றி குடிதண்ணீர் கிடைப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். டூவிபுரம் மேற்கு என்று இருந்த பகுதி இனி அண்ணாநகர் என்று மாநகராட்சியில் அனைத்து ஆவணங்களும் செயல்படுத்தப்படும் என்று பேசினார்.
கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலெட்சுமி, கலைசெல்வி, நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், கனகராஜ், கண்ணன், வைதேகி, சோமசுந்தரி, அதிர்ஷ்டமணி, ஜான்சிராணி, நாகேஷ்வரி, ஜெயசீலி, சரவணக்குமார், இசக்கிராஜா, ரிக்டா, பேபிஏஞ்சலின், காங்கிரஸ் சந்திரபோஸ், எடின்டா, கற்பககனி, கம்யூனிஸ்ட் தனலெட்சுமி, முத்துமாரி, இ.யு.மு.லீக் மும்தாஜ், மதிமுக ராமுஅம்மாள், துணை ஆணையர் சரவணகுமார், பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார், வெங்கட்ராமன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் ராமசந்திரன், காந்திமதி, முனீர்அகமது, நகரமைப்பு அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் நெடுமாறன், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.