இரண்டரை மணி நேரம் காத்திருந்த செய்தியாளர்கள் - பேட்டி கொடுக்காமல் எஸ்கேப் ஆன கனிமொழி

D.M.K NEWS

இரண்டரை மணி நேரம் காத்திருந்த செய்தியாளர்கள் - பேட்டி கொடுக்காமல் எஸ்கேப் ஆன கனிமொழி

தூத்துக்குடி தொகுதி எம்.பியான கனிமொழி, வாரம்தோறும் சனி,ஞாயிற்றுகிழமைகளில் நிச்சயமாக தொகுதியில் இருப்பார். அந்த வகையில் நேற்று தூத்துக்குடிக்கு வந்திருந்தார். தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதை அறிந்த செய்தியாளர்கள் அங்கு சென்றனர்.

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து எதாவது கேள்வி கேட்கலாம் என்று அவர்கள் நினைத்தனர். சுமார் இரண்டரை மணி நேரம் காத்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த எம்.பி, பேட்டி எதுவும் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பினார். இதனால் செய்தியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரத்தில் தேவையில்லாமல் எதாவது கேட்டு, பதில் சொல்லிவிட கூடாது என்று அவர் எஸ்கேப் ஆகியிருக்கிறார் என்று தெரிகிறது.