தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
N.P.Jegan
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியுள்ளது.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகர், ரஹமத் நகர், ராம் நகர், அய்யாசாமி காலனி, முத்தம்மாள் காலனி, மச்சாது நகர், ஆதிபராசக்தி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, அய்யர்விளை மற்றும் கோயில்பிள்ளை விளை ஆகிய பகுதியில் நடைபெற்று முடிந்த மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். மேலும் சில பள்ளமான பகுதிகளில் தற்போது மணல் அடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை பொறுத்தவரை வருங்காலங்களில் வடிகால் பணிகள் ஆரம்பமாகப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.
அவருடன் பகுதி செயலாளரும், மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், பகுதி செயலாளரும் கவுன்சிலருமான சுரேஷ்குமார், கவுன்சிலர் அந்தோணி மார்ஷலின், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் இருந்தனர்.